உடம்பை இரும்பாக்கும் கேப்பை களி சூப்பரா செய்யலாம்!

உடலுக்கு பலம் தரும் தானிய வகைகளில் முக்கியமானது கேழ்வரகு. இதில் செய்யப்படும் கேப்பை களியை உண்டுதான் முன்னோர்கள் உடலை இரும்பு போல வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட கேப்பை களியை எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு, தேங்காய் துறுவல், தண்ணீர், உப்பு,

ஒரு கப் கேழ்வரகு மாவில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கட்டி விழாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நல்ல கொதி வந்ததும் கரைத்து வைத்த கேழ்வரகு கரைசலை சேர்க்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி விழாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

Various source

தண்ணீர் ஆவியாகி கேழ்வரகு மாவு பாகு நிலைக்கு வரும்போது தேங்காய் துறுவலை சேர்த்து கிளற வேண்டும். தேங்காய் துறுவல் சேர்க்காமல் செய்வதும் உண்டு.

கையால் உருட்டும் பதத்திற்கு தண்ணீர் ஆவியாகி மாவு தயாரானது அதை எடுத்து ஓரளவு பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

கேப்பை களியுடன் வேர்க்கடலை சட்னி அல்லது கருவாட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.