ஆரோக்கியமான புரோட்டீன் சாதம் செய்வது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்களை உணவின் மூலமாகவே நாம் பெறுகிறோம். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதச் சாதம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையானவை: வேர்க்கடலை, முந்திரி, பாதம், காய்ந்த மிளகாய், கசகசா, நெய், உப்பு

முதலில் வேர்க்கடலையை வறுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கசாகசாவை தனியாக எண்ணெய் விட்டு வறுத்து தயாரித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, பாதாம் இரண்டையும் நன்றாக வறுக்க வேண்டும்.

Various source

பிறகு அதில் காய்ந்த மிளகாயை போட்டு இறக்கி விட வேண்டும்.

இந்த அனைத்து பொருட்களையும் சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாக பொடியாக அரைக்க வேண்டும்.

இவற்றை சாதத்துடன் கலந்து பறிமாறினால் சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு சத்தாகவும் இருக்கும்.