நோய்களை விரட்டும் பூண்டு கறிவேப்பிலை குழம்பு!

தினசரி உணவில் பயன்படுத்தப்படும் பூண்டு, கறிவேப்பிலை போன்றவை மருத்துவ குணமுடையவை. இவற்றை பயன்படுத்தி வைக்கும் குழம்பை சாப்பிடுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். சுவையான பூண்டு கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பூண்டு, கறிவேப்பிலை, வெந்தயம், காய்ந்த மிளகாய், தக்காளி, சின்ன வெங்காயம், கடுகு, புளி, உப்பு தேவையான அளவு

கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் வெந்தயத்தை தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பூண்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

Various Source

நன்றாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் அரைத்த கறிவேப்பிலை விழுது சேர்க்க வேண்டும்.

Various Source

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

இறுதியாக கொத்தமல்லியை தூவினால் ஆரோக்கியமான சுவையான பூண்டு கறிவேப்பிலை குழம்பு தயார்.