பொங்கல் ஸ்பெஷல்: சுவையான பால் பணியாரம் செய்யலாம் வாங்க!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று பணியாரம். இதில் பால் பணியாரம் சுவை மிக்கதும், குழந்தைகள் விரும்புவதுமான பண்டமாகும். சுவையான பால் பணியாரம் எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சரிசி, உளுந்து, பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உப்பு

பச்சரிசி, உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மாவுடன் கொஞ்சமாக உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதில் போட்டி பொறிக்க வேண்டும்

Various Source

சிவக்க பொறிந்து வந்தவுடன் எடுத்து எண்ணெய் வடிய ஆற விட வேண்டும்.

பாலை காய்ச்சி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு தயாரித்துக் கொள்ளவும்

பொறித்து ஆறவைத்த பணியாரத்தை பாலில் போட்டு ஊற வைத்து பரிமாறினால் சுவையான பால் பணியாரம் தயார்.