தினம் ஒரு மாதுளம்...!

தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நல்ல ஆரோக்கிய மாற்றங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

மாதுளம்பழம் தினமும் சாப்பிடுவதால் தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும்.

மாதுளம்பழம் தினமும் சாப்பிடுவதால் இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

தினமும் மாதுளம் சாப்பிட்டால் அவை ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

தினமும் மாதுளம் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

Social Media

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

Social Media

தினமும் மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.

Social Media

தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால் அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று இதயம் பலம் பெறும்.

Social Media