கேரளா ஸ்டைல் மொறு மொறு பாகற்காய் வறுவல் செய்வது எப்படி?
பாகற்காய் கசப்பு சுவையுடையது என்றாலும் உடலுக்கு பல நன்மைகள் தரக் கூடியது. பாகற்காயை ஆரோக்கியமான முறையில் கேரளா ஸ்டைல் வறுவலாக செய்வது எப்படி என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: பாகற்காய், மைதா மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், வினிகர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மோர், உப்பு, தேங்காய் எண்ணெய்
பாகற்காயை கழுவி வட்டத்துண்டுகளாக வெட்டி புளித்த மோரில் 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், மஞ்சள்தூள், மிளகாய் தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
அதனுடன் கொஞ்சம் வினிகர் ஊற்றி இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்
Various source
மோரில் ஊற வைத்த பாகற்காயை எடுத்து பிழிந்து தயார் செய்த மாவுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடானதும், தயார் செய்த பாகற்காய்களை போட வேண்டும்.
பாகற்காய்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசிறிவிட்டு போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான பாகற்காய் வறுவல் தயார்.