சத்தான சுவையான பாசிப்பருப்பு பணியாரம் செய்யலாம் வாங்க!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் தானியங்களில் பாசிப்பருப்பு முக்கியமானது. பாசிப்பருப்பை வைத்து சத்தான, சுவையான குழந்தைகள் விரும்பும் இனிப்பு பனியாரம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

Various source

தேவையான பொருட்கள்: பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், ஏலக்காய்த் தூள், எண்ணெய்,

பச்சரிசியை ஊற வைத்து நீரை வடித்துவிட்டு, உலர வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பாசிப்பருப்பை நன்றாக அலசி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும்.

கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கொஞ்சம் நீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

அரிசி மாவுடன், வெந்த பாசிப்பருப்பு, வெல்லப் பாகு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்

பணியார சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தயார் செய்த மாவை அதில் ஊற்ற வேண்டும்.

இருபக்கமும் பொன்முறுகலாக வரும் வரை திருப்பி விட்டு எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு பனியாரம் தயார்.