அசோக் செல்வன் நடித்து ரிலீஸாகியுள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் விமர்சனம்!
Twitter
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் “நித்தம் ஒரு வானம்”
அசோக் செல்வனுக்கு பெற்றோர் ஒரு பெண் பார்க்கின்றனர். அந்த பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார். மன அழுத்தத்தால் மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன்.
அசோக் செல்வனுக்கு இரண்டு கதைகளை படிக்கக் கொடுக்கிறார் அபிராமி. அந்த கதைகளில் தன்னையே ஹீரோவாக நினைத்துக் கொள்கிறார் அசோக் செல்வன்.
இரண்டு கதைகளிலும் கடைசி பக்கங்கள் இல்லை. பின்னர்தான் அது கதையல்ல நிஜம் என தெரிகிறது. கதையின் முடிவை அறிய நிஜ கதாப்பாத்திரங்களை தேடி செல்கிறார் அசோக் செல்வன்
இந்த பயணத்தில் அசோக் செல்வனுடன் ரிது வர்மாவும் இணைகிறார். கதையில் படித்த ஆட்களை நிஜத்தில் அவர் சந்தித்தாரா? அவர்களுடைய கதைகள் இவரை எப்படி மாற்றியது? என்பது சுவாரஸ்யமான படம்
Twitter
ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, ரிது வர்மா என நடிகைகள் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
Twitter
ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் நுட்பமாக பிரித்துக் காட்டி நடித்திருக்கிறார் அசோக் செல்வன். இயக்குனர் ரா.கார்த்திக் சிறப்பான காதல் படத்தை அளித்துள்ளார்.
Twitter
கோபி சுந்தரின் இசை காதலில் மெய் மறக்க செய்கிறது. விது அய்யனாரின் கேமரா இயற்கையை அழகாக காட்டியுள்ளது. படத்தின் நீளம் மட்டும் சற்று அயற்சியை தருகிறது.