நகம் கடித்தல் பற்களை பாதிக்குமா?
நகங்களை கடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் ஒன்றாக உள்ளது.
Pixabay
டென்ஷன், மனக்குழப்பம் என என்ன காரணமாக இருந்தாலும் நகம் கடிப்பது உடலுக்கு நல்லதல்ல.
நகத்தை தொடர்ந்து கடிப்பதால் விரல்களில் வீக்கம், நகத்தின் தசைப்பகுதி சிவப்பு நிறத்திற்கு மாறுவது போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
சில சமயம் பல் ஈறுகளில் காயம், முன்புற பற்களில் குறைபாடு போன்ற வாய்வழி பிரச்சினைகளும் நகம் கடிப்பதால் உண்டாகும்.
நீண்டநாட்களாக நகம் கடிக்கும் பழக்கம் பற்களில் கறைகளை உருவாக்கி இறுதியில் பற்களை சிதைத்துவிடும்.
இது மட்டுமின்றி பற்களில் விரிசலையும் ஏற்படுத்திவிடும்.
நக துகள்கள் ஈறுகளுக்குள் சென்றடைந்து பல் வலி, வீக்கம், நோய்தொற்று பாதிப்புகள் ஏற்படும்.
நகங்களை கடிக்கும் போது கடித்த நகத்தை விழுங்கிவிட்டால் வயிறுதொடர்பான பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.