நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போளி வீட்டிலேயே செய்யலாம்!

இனிப்பு பதார்த்தங்களில் பிரபலமான ஒன்று போளி. பலவகைகளில் போளியை செய்யலாம். அதில் நாகர்கோவில் ஸ்டைல் பருப்பு போளி பிரபலமானது. அதை எப்படி எளிதாக வீட்டிலேயே செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மைதா மாவு, கடலை பருப்பு, வெள்ளை சர்க்கரை, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஏலக்காய் தூள்

ஒரு கப் மைதா மாவுக்கு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து குழைவாக பிசைந்து கொள்ளவும்

பின்னர் அதில் நல்லெண்ணெய் மிதக்கும் அளவு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.

கடலைப்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து 7 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை கிளற வேண்டும்.

மைதா மாவை தேய்த்து அதில் கடலைப்பருப்பு கலவையை உருட்டி வைத்து அரிசி மாவில் தட்டி தேய்த்து எடுக்க வேண்டும்.

தோசக்கல்லில் நெய் ஊற்றி தயார் செய்த போளியை போட்டு இருபுறமும் சிவக்க சுட்டு எடுத்தால் சூப்பரான நாகர்கோவில் பருப்பு போளி தயார்.

Various Source