நோய்களை தூர விரட்டும் துத்தி இலையின் பயன்கள்!

துத்தி தாவரத்தின் இலை, பூ, வேர், விதை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் மிக்கவை. பல்வேறு நோய்களை தூர விரட்டும் துத்தி இலையின் பயன்களை தெரிந்து கொள்வோம்.

Various Source

துத்தி பூக்களை தூள் செய்து பாலில் கலந்து குடித்து வர உடல் சூடு குறையும்.

துத்தி விதையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர கருமேகம் உள்ளிட்ட தோல் வியாதிகள் நீங்கும்.

துத்தி இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஆசன பகுதியில் கட்டி வந்தால் மூலத்திற்கு நிவாரணம் அளிக்கும்.

துத்தி இலை ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.

Various Source

துத்தி இலையை நெய்யில் வதக்கி சோறுடன் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் குணமாகும்.

Various Source

துத்திப்பூவை சிறிது கருப்பட்டி, வெல்லம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர ஆண்மை பெருகும்.

Various Source

துத்தி இலை சாறுடன் நெய் சேர்த்து குடித்து வர மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.