உயிர் காக்கும் சித்த மருந்து நத்தை சூரியின் அற்புத பலன்கள்..!

சித்த வைத்தியத்தில் மிக முக்கியமான மூலிகையான நத்தை சூரி சித்தர்களால் மகாமூலிகை என்றும் அழைக்கப்பட்டது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட நத்தை சூரி பல நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Various Source

பூண்டு வகையை சேர்ந்த நத்தை சூரியின் விதை, வேர் ஆகியவை ஏராளமான மருத்துவ குணம் கொண்டது.

நத்தை சூரி விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும்

நத்தை சூரி விதை பொடியை தண்ணீரில் கலக்கி குடித்து வந்தால் உடலில் உள்ள ஊளை சதை குறையும்.

நத்தை சூரி விதை பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி மற்றும் வயிற்றோட்டம் குணமாகும்.

Various Source

நத்தை சூரி வேரை காயவைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் பெண்களுக்கு தாய்ப்பால் பெருகும்.

Various Source

நத்தை சூரி விதை பொடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.

Various Source

நத்தை சூரி சூரணத்தை நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர ஆண்மை பலம் அதிகரிக்கும்.