பச்சிலை சாறுகளின் அற்புத பயன்கள் தெரியுமா..?

நாட்டு மருத்துவத்தில் பல நோய்களையும் குணமாக்க அதிகம் பயன்படுவது பச்சிலை சாறு. பல்வேறு தாவரங்களின் மூலிகை சாறுகள் பல உடல் பிரச்சினைகளை குணப்படுத்த வல்லவை. அவற்றில் முக்கியமான 7 பச்சிலை சாறுகளை காணலாம்..

Various Source

அருகம்புல் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வாய்ப்புண் ஆற்றவும், தாய்பால் சுரக்கவும் உதவுகிறது.

வல்லாரை சாறு குடித்து வந்தால் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் குறையும்.

கொத்தமல்லி சாறு சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகளை குணமாக்கும்.

புதினா சாறு குடித்தால் முகப்பரு உள்ளிட்டவை ஏற்படுவதை தடுப்பதுடன், வாயு கோளாறுகளையும் சரியாக்கும்.

Various Source

துளசி சாறு குடித்தால் சளி பிரச்சினை குறைவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

முடக்கத்தான் இலையை சாறு பிழிந்து குடித்தால் மூட்டு வலி பிரச்சினைகள் குறையும்.

ஆடாதோடா இலைச் சாறை பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.