அருமருந்தாகும் ஆகாச கருடன் கிழங்கின் பயன்கள்..!

இயற்கை தந்த மூலிகை பொருட்களில் ஒன்றான ஆகாச கருடன் கிழங்கு பல்வேறு மருத்துவ நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆகாச கருடன் கிழங்கு தரும் பயன்கள் குறித்து காண்போம்..

Various Source

கிராமங்களில் விலங்குகள் கடிக்கு ஆகாச கருடனை அரைத்து பூசுவது வழக்கம்.

ஆகாச கருடன் கிழங்கு பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

ஆகாச கருடன் கிழங்குடன், வெங்காயம், சீரகம் சேர்த்து வதக்கி, அரைத்து பற்று போட்டு வர கீழ்வாதம் சரியாகும்.

பாம்பு கடித்தவுடன் ஆகாச கருடன் கிழங்கை வெறும் வாயில் சாப்பிட்டால், வாந்தி, பேதி ஏற்பட்டு விஷம் முறியும் என்பது நாட்டு மருத்துவ முறை.

Various Source

சின்ன சின்ன பூச்சிக் கடிகளுக்கும் ஆகாச கருடன் கிழங்கு நல்ல பயனை அளிக்கக் கூடியது.

ஆகாச கருடன் மேல் தோலை சீவி காயவைத்து பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் தோல் பிரச்சினைகள் நீங்கும்.

பெரும்பாலான வீடுகளில் ஆகாச கருடன் கிழங்கு விஷ ஜந்துக்கள் நுழையாமல் இருக்க வாசலில் கட்டப்படுகிறது.