மணமணக்கும் மங்களூர் முட்டை குழம்பு செய்யலாமா?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கும். அப்படி மங்களூர் ஸ்பெஷல் முட்டை கிரேவி சுவை மாறாமல் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம்.

Various source

தேவையானவை: அவித்த முட்டை, பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, சீரகம், புளி, துருவிய தேங்காய், வரமிளகாய், மல்லித்தழை

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, மிளகு, பூண்டு, தனியா, சீரகம், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் புளி, மஞ்சள், தேங்காய் துருவல் சேர்த்து சில நிமிடங்கள் வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அவித்த முட்டையை நான்கு பக்கம் லேசாக கீறி தவாவில் போட்டு எண்ணெய் விட்டு சில நிமிடங்கள் வறுக்க வேண்டும்.

Various source

பின்னர் அரைத்து வைத்த கலவையை அளவாக நீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

Various source

நல்ல கொதி வந்ததும் அதில் வறுத்து தயார் செய்த முட்டையை சேர்த்து முட்டை உடைந்து போகாமல் கிளற வேண்டும்.

பின்னர் மல்லித்தழை தூவி இறக்கினால் மணமணக்கும் மங்களூர் முட்டைக் குழம்பு தயார்.