மணமணக்கும் மணத்தக்காளி சூப் செய்யலாம் வாங்க!

சத்துமிகுந்த ஆரோக்கியமான கீரைகளில் ஒன்றான மணத்தக்காளில் கீரையை கொண்டு சூடான சூப்பரான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு, தக்காளி, பெருங்காய தூள்,

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு 10 பல் பூண்டை தட்டி போட்டு சோம்பு, மிளகு, சீரகம் பொடித்து சேர்த்து வதக்கவும்.

அதனுடன் 15 சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.

தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட வேண்டும்.

Various Source

பின்னர் தண்டு அகற்றி வைத்த மணத்தக்காளில் கீரையை அதில் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கீரையின் பச்சை இலை வாடை அகன்று நன்று வெந்ததும் இறக்கினால் சூடான சூப்பரான மணத்தக்காளி சூப் தயார்.