தித்திப்பான மைதா மடக்கு செய்வது எப்படி?

மடக்கு பலகாரம் தமிழ்நாட்டின் கிராமங்களில் மிகவும் பிரபலமானது. தித்திக்கும் சுவையான மைதா மடக்கு வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: மைதா மாவு, வெண்ணெய், ஓமம், மிளகு தூள், உப்பு, சர்க்கரை, ஏலக்காய்

சர்க்கரையை ஏலக்காய், தண்ணீர் சேர்த்து இலகுவான பாகுவாக காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்.

2 கப் மைதா மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், மிளகு தூள், உப்பு, ஓமம் சேர்த்து எண்ணெய் சேர்த்து பிசையவும்

சப்பாத்தி மாவு பதம் வரும் வரை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும்

பின்னர் சப்பாத்தி கட்டையால் தேய்த்து மாவை சமமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

கட்டமாக வெட்டிய மாவை நடுவே கோடுகளாக கீறி விட்டு எதிர் மூலைகளை தண்ணீர் தடவி ஒட்ட வேண்டும்

இப்போது தயார் செய்துள்ள மடக்குகளை வாணலியில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுத்து சர்க்கரை பாகில் ஊற விட்டு எடுக்க வேண்டும்.

Various source