சுவையான மடக்கு பூரி வீட்டிலேயே செய்வது எப்படி?

விஷேச நாட்கள் என்றாலே பலகாரங்கள் இல்லாமல் நிறைவடைவதில்லை. சுவையான மடக்கு பூரி செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, துருவிய தேங்காய், சர்க்கரை, நெய், முந்திரி, எண்ணெய், உப்பு தேவையான அளவு.

முதலில் கோதுமை மாவுடன்நெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றகா பிசைய வேண்டும்.

அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பூரி தட்டும் பதத்திற்கு மாவை தயார் செய்ய வேண்டும்.

நன்றாக உலர வைத்த தேங்காய் துறுவல், சர்க்கரை, உடைத்த முந்திரி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து பூரணம் தயார் செய்யவும்.

தயார் செய்து வைத்த மாவை சிறிய வட்டமாக சப்பாத்தி போல தேய்த்து அதில் பூரணம் வைக்க வேண்டும்.

Various Source

மடிக்கும்போது அரை வட்டமாக மடித்து இரு ஓரங்களையும் நன்றாக அமுக்கி ஒட்டிக் கொள்ளவும்.

ஓர் கடாயில் எண்ணெய் ஊற்றி தயாரித்த மடக்கு பூரியை அதில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான மடக்கு பூரி தயார்.