கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் என்ன? செய்வது எப்படி?

காபி என்றாலே நமது ஊரில் பெரும்பாலோனோருக்கு ஞாபகம் வருவது கும்பகோணம் டிகிரி காபிதான். பலரும் தற்போது ஈஸியாக செய்துவிடலாம் என்று பவுடர் காபி குடித்தாலும் பில்டர் காபி விரும்பிகளும் இருக்கவே செய்கின்றனர். தரமான கும்பகோணம் டிகிரி காபி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: காபி தூள் (சிக்கரி தூள் கலக்காதது), பசும்பால், சர்க்கரை,

தரமான டிகிரி காபிக்கு தண்ணீர் கலக்காத பாலும், சிக்கரி கலக்காத காபி பொடியும் தேவை

சிக்கரி கலக்காத காபி பொடியை ஃபில்டரில் போட்டு வெந்நீர் ஊற்றி ஸ்ட்ராங்கான டிக்காஷனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பசும்பாலை தண்ணீர் சேர்க்காமல் இரண்டு முறை பொங்க காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

ஒரு டம்ளர் அல்லது டவரா செட் எடுத்து அதில் முதலில் சர்க்கரையை ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும்.

டம்ப்ளரில் மூன்றில் ஒரு பங்கு அளவு டிக்காஷன் சேர்த்து அதில் பாலை ஊற்றி ஆற்றினால் சுவையான கும்பகோணம் டிகிரி காபி தயார்.