கொங்கு ஸ்பெஷல் அரிசிம்பருப்பு சாதம் செய்வது எப்படி?

கோவை உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு வகை அரிசிம்பருப்பு சாதம். இதை நமது வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: அரிசி, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய் துறுவல், கடுகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி,

முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு தாளித்து அதில் நறுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்

அதனுடன் கறிவேப்பிலை, வர மிளகாய், மஞ்சள்தூள், பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும்.

Various Source

பின்னர் கழுவிய அரிசி, பருப்பு மற்றும் தேங்காய் துறுவலை அவற்றுடன் சேர்க்க வேண்டும்.

அரிசி வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைக்கெ வேண்டும்.

பின்னர் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லியை தூவி எடுத்தால் சுவையான அரிசிம்பருப்பு சாதம் தயார்.