கமகமக்கும் கொண்டைக் கடலை குழம்பு செய்வது எப்படி?

உணவு வகைகளில் பல ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்தது கொண்டைக் கடலை. இதை கொண்டு சுவையான காரச்சாரமான கொண்டைக் கடலை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various Source

தேவையானவை: கொண்டைக்கடலை, பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை,

தேங்காய் துறுவல், சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, மிளகு இவற்றை சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைத்து சமைப்பதற்கு முன் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

Various Source

பின்னர் அரைத்த இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

Various Source

பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.

பின்னர் அரைத்த மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் கமகமக்கும் கொண்டைக்கடலை குழம்பு தயார்.