கேரளா ஸ்டைல் அவியல் ஈஸியா செய்யலாம் வாங்க!

கேரளா என்றாலே விதவிதமான பல உணவுகள் நினைவுக்கு வரும். கேரளாவில் ஓணம் ஸ்பெஷல் என்றால் அது அவியல்தான். கேரளா ஸ்டைல் அவியலை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான காய்கள்: வாழைக்காய், கேரட், சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், வெள்ளை பூசணி, அவரைக்காய், முருங்கைக்காய், பீன்ஸ், கத்தரிக்காய்

இந்த காய்கறிகளை நீளவாக்கில் மீடியம் துண்டுகளாக வெட்டி கழுவி குக்கரில் தண்ணீர் விட்டு அவித்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் துறுவல், பச்சை மிளகாய், சீரகம், 2 பல் பூண்டு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகள் பதமாக வெந்ததும் அரைத்து வைத்த பேஸ்ட் சேர்த்து, உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

Various Source

அவியலை இறக்கும் முன் சில நிமிடங்கள் முன்னதாக 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கிளற வேண்டும்.

Various Source

இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, தாளித்த கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாயை சேர்க்க வேண்டும்.

பின்னர் சூடாக இறக்கினால் மணமணக்கும் கேரளா ஸ்டைல் அவியல் தயார்.