கண்டங்கத்திரி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

இயற்கை மூலிகை தாவரமான கண்டங்கத்திரியின் பூ, காய், இலை, பழம், விதை என அனைத்து பாகங்களும் பல்வேறு நோய்களை தீர்க்கும் அற்புது மருத்துவ குணம் கொண்டவை.

Various Source

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணியிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை.

கண்டங்கத்திரி பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

கண்டங்கத்திரி இலைச் சாறுடன், நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தடவினால் தலைவலி, வாத நோய்களுக்கு அருமருந்தாகும்.

கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை சேர்த்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சுவாச பிரச்சினைகள் தீரும்.

Various Source

பாதவெடிப்புகளை சரிசெய்ய கண்டங்கத்திரி இலைச் சாறுடன் ஆளி விதை எண்ணெய் சேர்த்து காய்ச்சி பூசி வந்தால் குணமாகும்.

கண்டங்கத்திரி இலைச் சாறுடன் சம அளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர் பாதை எரிச்சல் சரியாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட குழந்தைகளுக்கு நாள்பட்ட இருமல் குணமாகும்.