கிராமங்களில் காலையில் பழைய சோறு ஊற வைத்த நீராகாரத்தை சாப்பிடுவது வழக்கமாக உள்ளது. பல்வேறு சத்துக்களையும், நன்மைகளையும் தரக்கூடியது நீராகாரம். அதன் நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
Various source
நீராகாரம் பழைய சோற்றில் இருந்து பெறப்படுவதால் புளிச்ச தண்ணீர் என்றும் அழைக்கப்படுகிறது.
காலையிலேயே நீராகாரம் சாப்பிடுவது உடல் சூட்டை குறைக்கிறது.
நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கிறது.
நீராகாரம் கிருமிகளை நீக்கி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
Various source
செரிமான கோளாறு, ஏப்பம் போன்றவை நீராகாரம் அருந்துவதால் குறையும்.
Various source
நீராகாரம் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதால் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகள் சிறுநீர் வழியாக வெளியேற உதவுகிறது.
காலையில் நீராகாரம் அருந்துவது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது.