வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது சிறந்ததா?

பப்பாளி சாப்பிடுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அதை வெறும் வயிற்றில் உட்கொள்வது இன்னும் அதிகமான நன்மைகளை வழங்கும் என தெரியுமா....

Pexels

வைட்டமின் சி நிரம்பிய பப்பாளி, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

சர்க்கரை குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் உள்ள பப்பாளி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்க சிறந்த தேர்வாகும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் காரணமாக, பப்பாளி உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவுகிறது.

வைட்டமின் ஏ நிறைந்துள்ள பப்பாளி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முகப்பருவை குறைக்கவும், வயதானதை தடுக்கவும் உதவுகிறது.

பப்பாளியில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் நிறைவாக இருக்க உதவுகிறது.

பப்பாளியில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், பக்கவாதத்தைத் தடுக்கவும் உதவும்.