இடி இடிக்கும்போது செல்போன் பயன்படுத்துவது ஆபத்தா?

இடியுடன் கூடிய மழையின் போது கைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று பலராலும் நம்பப்படுகிறது. இதுகுறித்த சில தகவல்களை தெரிந்து கொள்வோம்.

Pixabay

மின்னலின் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் பாதிப்பில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மொபைல் போன்கள் மின்னலை ஈர்க்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அது நிரூபிக்கப்படாத ஒன்று என கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் சிக்னல்களுக்கு மின்காந்த அலைகளில் ஒன்றான ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகின்றன

இந்த அலைகள் வழியாக மின்சாரம் செல்வதில்லை. அதாவது மின்னல் இந்த ரேடியோ அலைகள் வழியாக மொபைலை தாக்குவதில்லை

Pixabay

மொபைல் ஒருபோதும் மின்னலை ஈர்க்காது என்பதால் செல்போனை இடி தாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

Pixabay

ஆனால் இடியுடன் கூடிய மழையின் போது உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டாம்

இடியுடன் கூடிய மழையின் போது லேண்ட்லைன் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்

கம்பியில் இணைக்கப்பட்டுள்ளதால், இதன் மூலம் மின்சாரம் பாயும் வாய்ப்புள்ளது.