ஆரோக்கியத்திற்கு பிளாக் காபி சிறந்த தேர்வா?

பால், சர்க்கரை கலந்த காபியை விட எதுவும் சேர்க்கப்படாமல் இருக்கும் பிளாக் காபியில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

பிளாக் காபியில் இயற்கையாகவே ஆன்டிஆக்சிடென்டுகள், வைட்டமின் பி2, பி3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது.

காலை அல்லது பகல் பொழுதில் கருப்பு காபி பருகுவது சிறந்தது. இரவில் தூங்கும் முன் கருப்பு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

பிளாக் காபி உடல் எடையை சீராக பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை தூண்டவும் உதவக்கூடியது.

பிளாக் காபி பருகுவது அல்சைமர் நோய் அபாயத்தை குறைக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகுவதன் மூலம் அல்சைமர் நோய் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என ஆய்வு.

Pexels

பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவும் என கூறப்படுகிறது.

Pexels

பிளாக் காபியை தொடர்ந்து பருகுவது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்து நீரிழிவு அபாயத்தை குறைக்கும்.

Pexels

தினமும் 2 அல்லது 3 கப் பிளாக் காபி பருகலாம். அதற்கு மேல் பருகினால் பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

Pexels