உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான 7 பானங்கள்!

பழங்களில் ஏராளமான விட்டமின் மற்றும் பலவித சத்துகள் உள்ளன. இரும்பு சத்து ரத்தத்தை உடலில் அதிகரிப்பதோடு சுறுசுறுப்பாகவும் நம்மை இயங்க வைக்கிறது. இரும்பு சத்து நிறைந்துள்ள சில பானங்கள்.

Various Source

உலர்ந்த ப்ளம்ஸ் பழங்களால் தயாரிக்கப்படும் ப்ருனே ஜூஸில் தினசரி தேவையில் 17% இரும்புச்சத்து உள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக்கும்.

பீட்ரூட் ஜூஸில் மாங்கனீசு, இரும்பு, விட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. ரத்த சிவப்பணுக்களின் ஆக்ஸிஜன் பயன்பாட்டை அதிகரிக்கிறது.

பூசணிக்காய் ஜூஸில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்கள், மினரல்கள் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான சத்துகளை வழங்குகிறது.

எலுமிச்சை, கொத்தமல்லி, கீரை, வெள்ளரிக்காய் கலந்து தயாரிக்கப்படும் க்ரீன் ஜூஸ் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் குளிர்ச்சியை அளிக்கிறது.

அன்னாசி பழத்துடன் பசலை கீரையை அரைத்து செய்யும் பழச்சாறில் ஏராளமான விட்டமின் சி சத்துகள் உள்ளது.

பேரீச்சம்பழம் மற்றும் மாதுளை கலந்து தயாரிக்கப்படும் பானம் தினசரி உற்சாகமாக இருக்க அருமையான தேர்வு

பால், தேனுடன் ஆளி விதை மற்றும் எள் கலந்து பானமாக அருந்தினால் ரத்த ஹீமோகுளோபின் அதிகரிக்கும். எலும்புகள் வலு பெறும்.