பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 14-ஐ குறைந்த விலையில் எப்படி வாங்குவது?
பிளிப்கார்ட் நிறுவனத்தின் Black Friday விற்பனையின் ஒரு பகுதியாக ஆப்பிள் ஐபோன் 14 ஸ்மார்ட்போன் ரூ.2,500 தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
செப்டம்பர் மாத வாக்கில் ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன் விலை குறைப்பிற்கு பின்னர் ரூ.77,400க்கு கிடைக்கிறது
கூடுதலாக, HDFC வங்கி அட்டை அல்லது EMI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.5,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.
உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை - ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஐபோன்கள் எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20,500 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கப்பெறும்.
எக்சேன்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம்.
தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பெறுவதன் மூலம் நீங்கள் ரூ.60,000க்குள் அதாவது ரூ.51,900-க்கு ஆப்பிள் ஐபோன் 14-ஐ எளிதாகப் பெறலாம்.