பாலுடன் எதையெல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாது?

அன்றாட உணவில் பால் அவசியமான ஊட்டச்சத்துள்ள உணவு. ஆனால் பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு தரும். எதையெல்லாம் பாலில் சேர்க்கக் கூடாது என பார்க்கலாம்..

Various Source

மீன் சாப்பிட்ட பிறகு பால் குடிக்கக் கூடாது. இது ரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இரவு நேரத்தில் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் உடலில் குளிர்ச்சி அதிகமாகி சளி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

தர்பூசணி சாப்பிட்ட பின் பால் குடிக்கக் கூடாது. இது அசௌகரியம் மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

பால், முட்டை இரண்டிலும் புரதச்சத்து அதிகம் உள்ளது. இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் செரிமான பிரச்சினை ஏற்படும்.

Various Source

கீரையில் உள்ள டானின் பாலை திரள செய்யும் என்பதால் இரண்டையும் ஒரே சமயம் சாப்பிட்டால் வயிற்று பிரச்சினை எழும்.

Various Source

விட்டமின் சி நிறைந்த பழங்களை பாலுடன் சேர்த்து உட்கொள்ளக் கூடாது.

Various Source

பாலை எந்த வித சேர்ப்பும் இல்லாமல் சாப்பிட்டால் அதில் உள்ள கால்சியம் சத்து முழுமையாக நமக்கு கிடைக்கும்.