மளிகை பொருட்கள் பட்ஜெட்டில் மிச்சம் பிடிப்பது எப்படி?

மாதம்தோறும் அதிக செலவு வைக்கும் விஷயங்களில் ஒன்று மளிகை சாமான்கள். சில எளிமையான வழிகளை பின்பற்றுவதன் மூலம் மளிகை சாமான் பட்ஜெட்டில் ஏராளமான பணத்தை மிச்சம் பிடிக்கலாம். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

Pixabay

மாதம்தோறும் ஷாப்பிங் செய்வதற்கு இவ்வளவுதான் பட்ஜெட் என முதலில் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

மாதம்தோறும் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பட்டியலிட்டு அதை மட்டும் வாங்க வேண்டும்.

சில்லறையாக வாங்காமல் மொத்தமாக வாங்குவதால் விலையும் குறையும், பொருளும் கொஞ்சம் அதிகம் கிடைக்கும்.

ஒரே பொருள் பல ப்ராண்டுகளில் இருக்கும்போது விலை குறைவாகவும், தரமாகவும் உள்ள ப்ராண்டை தேர்வு செய்வது நல்லது.

Pixabay

பதப்படுத்தப்பட்ட பொருட்கள் விலை அதிகம் இருக்கும். அவற்றை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

Pixabay

உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை சூப்பர்மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்கலாம்.

தேவையான பொருட்களை தாண்டி ஈர்ப்பினால் சில பொருட்களை எடுத்து பில் போடுவதை தவிர்ப்பதும் பணத்தை மிச்சப்படுத்தும்.