குடிநீரை இயற்கையான முறையில் சுத்திகரிப்பது எப்படி?

தண்ணீர் உயிர்வாழ மனிதர்களுக்கு அவசியமான ஒன்று. ஆனால் சுத்தமான குடிநீரை பெற பலரது வீடுகளிலும் தொழில்நுட்ப சாதனங்கள் இருப்பதில்லை. இயற்கையான பொருட்களை கொண்டு தண்ணீரை சுத்திகரிப்பது எப்படி என பார்க்கலாம்.

Various Source

வீடுகளில் குடிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வெறும் கைகளால் குவளைகளில் எடுக்காமல் அதற்கென நீண்ட கைப்பிடி கொண்ட குவளைகளை பயன்படுத்தலாம்.

மண் பானைகள், சில்வர் பாத்திரங்களிலேயே குழாய் வைத்த பாத்திரங்களை தண்ணீர் எடுக்க பயன்படுத்தலாம்.

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் தேத்தான் கொட்டை பொடியை தண்ணீரில் கலந்து பயன்படுத்தினால் நீரில் உள்ள கிருமிகளை நீக்கும்.

மண் பானையில் சீரகம், மிளகு, திப்பிலி, போன்ற மூலிகைகளை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம்.

Various Source

நன்னாரி, வெட்டிவேர் போன்ற வேர் வகைகளை தண்ணீரில் போட்டு குடிப்பது உடலுக்கு நலம் பயக்கும்.

Various Source

இவ்வாறு மூலிகை கலந்த தண்ணீர் கிருமிகளை அளிப்பதுடன் உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது.

பெரும்பாலும் தண்ணீரை சுத்திகரிக்க அதை கொதிக்க வைத்து தூய்மையான துணியில் வடிகட்டி சேமித்து வைப்பது நல்லது.