வெயில் காலத்தில் இதை மட்டும் செய்யாதீங்க..!

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வருவதுடன், பல்வேறு சீசன் வியாதிகளும் வருகின்றன. வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Various Source

அதிகமான வெயிலில் கால் தெரியும்படியான காலணிகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது.

வெளியே செல்லும்போது எப்போதும் உடன் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது நலம்.

வெயில் காலங்களில் சூடான காபி, டீ போன்றவற்றை மதிய நேரங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வெயில் தாக்கத்தை குறைக்க தண்ணீர், நீர் மோர், இளநீர் போன்றவற்றை குடிக்கலாம்.

Various Source

வெயிலில் நின்று வேலை செய்பவர்கள் மணி நேரத்திற்கு ஒரு முறை நிழலில் ஓய்வு எடுத்துக் கொள்தல் நலம்.

கோடை காலத்தில் காற்றோட்டமான உடைகள், காட்டன் உடைகளை அணிவது நல்லது.

உச்சி வெயிலில் செல்ல வேண்டிய கட்டாயம் எழுந்தால் குடை, தொப்பி அணிந்து செல்வது நல்லது.