பொதுவாக இட்லியை அரிசி மாவில் செய்வது பலருக்கும் தெரியும். ஆனால் தானியங்களை சேர்த்து செய்யப்படும் தானிய இட்லி சாதாரண இட்லிகளை விட சத்துக்கள் நிறைந்தது. தானிய இட்லி எப்படி செய்வது என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, இட்லி அரிசி, தினையரிசி, உளுந்து, கொள்ளு, வெந்தயம், உப்பு தேவையான அளவு.
கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, அரிசி, திணை, அனைத்தையும் ஒரே அளவாக எடுத்து கொள்ளு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
நான்கு மணி நேரம் ஊறவைத்த தானியங்களை நன்றாக அரைத்து உளுந்து மாவுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.
Various source
மாவை சில மணி நேரங்கள் வைத்திருந்து புளித்த பின் இட்லி சுட தொடங்க வேண்டும்.
Various source
வழக்கமாக இட்லி சுடுவது போல இட்லி பானையில் ஊற்றி எடுக்கலாம்.
சுவையான தானிய இட்லியுடன் சட்னி வகைகளை சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.