சுவையான இட்லி பொடி செய்வது எப்படி??

சுவையான ஆபத்திற்கு சட்டென்று உதவும் இட்லி பொடியை எப்படி செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்.

Social Media

காய்ந்த மிளகாய் – 50 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 150 கிராம், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, வெள்ளை எள் – 50 கிராம், மிளகு – ஒரு ஸ்பூன், பூண்டு பல் – 10, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

செய்முறை : அடிகனமான பாத்திரம் அதாவது வறுப்பதற்கு சுலபமான கடாயை அடுப்பில் வைத்து மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும்.

உளுத்தம் பருப்பும் கடலை பருப்பும் பொன்னிறமாக வறுபட வேண்டும். சீரகம், மிளகு, பூண்டு கருகாமல் வறுப்பட்டால் போதுமானது.

எள்ளு படபடவென பொறிந்தால் போதும். காய்ந்த மிளகாயை கடாயில் போட்டு சூடு செய்து எடுத்தால் போதும்.

கறிவேப்பிலை காய்ந்ததாக இருக்கும் பட்சத்தில் கடாயில் போட்டு சூடு செய்து எடுத்தால் போதுமானது. பச்சை கறிவேப்பிலையாக இருக்கும் பட்சத்தில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்க வேண்டும்.

Social Media

அனைத்தையும் வறுத்த பின்னர் ஆறவிட்டு பின்னர் மிக்சியில் போட்டு இதனுடன் பொடிக்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

Social Media

அரைத்த பொடியை காற்று போகாமல் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் நேரத்தில் நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.

Social Media