சூப்பரான கேரளா ஸ்பெஷல் குழாய் புட்டு செய்வது எப்படி?

கேரளாவில் பிரபலமான உணவு வகைகளில் புட்டு முக்கியமானது. குழாயில் வேகவைத்து எடுக்கும் புட்டு வயிற்று செரிமானத்திற்கும், உடலுக்கும் நல்லது. சுவையான சூப்பரான கேரளா குழாய் புட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: புட்டு (அரிசி) மாவு, தேங்காய் துறுவல், ஏலக்காய், சர்க்கரை, உப்பு தேவையான அளவு

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் புட்டு மாவுடன் உப்பு, இடித்த ஏலக்காய் சேர்த்து தண்ணீர்விட்டு உதிரியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் மாவை உதிரியாக சல்லடையில் போட்டு சலித்து 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

புட்டு மேக்கரில் முதலில் கொஞ்சம் தேங்காய் துறுவல் சேர்த்து, பின்னர் புட்டு மாவை சேர்த்து, மீண்டும் மேலே தேங்காய் துறுவலை வைத்து மூடவும்.

குக்கரில் தண்ணீர் வைத்து புட்டு மேக்கரை அதில் வைத்து நீரை கொதிக்க விட்டு புட்டை ஆவியில் சுட்டு எடுக்க வேண்டும்.

புட்டு வெந்தவுடன் எடுத்து வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.