சத்தான கீரைப்பருப்பு சாதம் செய்வது எப்படி?

சத்தான உணவு வகைகளில் கீரை வகைகள் அவசியமான ஒன்று. கீரையை அனைவருக்கும் பிடித்த வகையில் சுவையான கீரைப்பருப்பு சாதமாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, முளைக்கீரை, பச்சை மிளகாய், நெய், உப்பு தேவையான அளவு.

அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

முளைக்கீரையை நன்றாக கழுவி நடுத்தரமான அளவிற்கு நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பச்சை மிளகாய், தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various source

பாத்திரத்தில் உலையை வைத்து அரிசி, பருப்புடன் கீரை, தக்காளி, பச்சை மிளகாயையும் போட்டு வேக வைக்க வேண்டும்.

Various source

சாதம் குழைவாக வரும் வரை வேக விட்டு, பின்னர் அதில் நெய் கலந்து இறக்க வேண்டும்.

இந்த கீரைப்பருப்பு சாதம் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது.