புஸு புஸுனு சாஃப்டா இட்லி சுடனுமா??
நீங்க சுட்டு எடுக்கும் இட்லி பூப்போல மென்மையாயா, புஸு புஸுனு வெள்ளையா வரனுமா?
Webdunia
3 கப் இட்லி அரிசி, 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைக்கவும். இதற்கு 1 கப் உளுந்து போதுமானது.
அதாவது 1 பங்கு உளுந்துக்கு, 3 ½ பங்கு இட்லி அரிசி. இதனை நன்கு கழுவி பின் 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
ஊறிய பின்பு 20 நிமிடம் வரை உளுந்தை அரைக்கவும். ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தி மாவு அரைக்கலாம்.
உளுந்து எந்த அளவிற்கு நன்றாக அரைக்கிறதோ, அந்த அளவிற்கு இட்லி மிருதுவாக வரும்.
Webdunia
அடுத்து அரிசி, அரிசியை போட்டு 15 நிமிடம் அரைத்தால் போதுமானது. அரிசி கொரகொரவென்று இருக்க வேண்டும்.
Webdunia
பின் இரண்டையும் ஒன்றாக கலந்து 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடுங்கள்.
Webdunia
அதன் பிறகு இட்லி ஊற்றும் பொழுது நன்றாக கலந்து விட்டு அப்படியே இட்லி ஊற்றி வேகவைக்கவும்.
Webdunia
பொதுவாக மாவை பிரிட்ஜில் வைக்கும் போது அரை மணி நேரம் கழித்து இட்லி ஊற்றினால் நல்லது.