பஞ்சு போல் இடியாப்பம் செய்வது எப்படி??

இட்லி, தோசை போன்ற காலை உணவுகள் போர் அடிக்கிறதா? இடியாப்பம் செய்யலாம் வாங்க...

Webdunia

தேவையான பொருள்கள்: இடியாப்ப மாவு – 1 1/2கப், தேங்காய்த் துருவல் – ஒரு மூடி, தண்ணீர், நாட்டுச் சர்க்கரை, உப்பு, நெய் – தேவைக்கேற்ப

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் இடியாப்ப மாவுடன் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்துக்கொள்ளவும்.

மாவு பிசையும் போது அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக பிசைய வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளவும்.

அதோடு மாவு கையில் ஒட்டாத பதத்திற்கும் இருக்க வேண்டும்.

Webdunia

இந்த பதத்துக்கு மாவு வந்த பிறகு, மாவை இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும். 5 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.

Webdunia

இதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல், நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

Webdunia

சைவ பிரியர்கள் சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிடலாம்.

Webdunia

அசைவ பிரியர்கள் சூடான இடியாப்பத்துடன் ஆட்டுக்கால் பாயாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Webdunia