தீபாவளி நெருங்கி வருவதால் அனைவரும்ம் ஸ்வீட் கொடுத்து மகிழ குலோப் ஜாமூன் செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: பால் பவுடர் – 2 கப், மைதா மாவு – 2 ஸ்பூன், நெய் – 1 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, பால் – 4 தேக்கரண்டி, சர்க்கரை – 1/2 கப், ஏலக்காய் பொடி, எண்ணை
செய்முறை: முதலில் சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு கடாயில் 1/2 கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
சர்க்கரை நன்கு கரைந்து ஓரளவு திக்கான பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து ஓரமாக எடுத்து வைக்கவும்.
குலோப் ஜாமுன் செய்வதற்கு ஒரு பவுலில் 2 கப் பால் அதனுடன் 2 ஸ்பூன் மைதா, 1 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் ரவை,1 சிட்டிகை சமையல் சோடா சேர்த்து நன்கு கலக்கவும்.
Social Media
கலந்த பின்னர் 4 தேக்கரண்டி பால் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும். இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
Social Media
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயை விட சற்று குறைவாக வைத்து தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
Social Media
பொறித்த உருண்டைகளை தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்தால் குலோப் ஜாமுன் தயார்.