சப்பாத்தி சாஃப்டா புஸ்ஸுனு வரனுமா..?

சப்பாத்தி இன்று அனைவரின் வீட்டிலும் கட்டாய உணவாகி விட்டது.

Twitter

அப்படிப்பட்ட சப்பாத்தி சாஃப்ட்டாக வேண்டுமெனில் இனி இப்படி சப்பாத்தி மாவு பிசையுங்கள்.

கோதுமை மாவு வீட்டில் அரைத்தது அல்லது கடையில் வாங்கியது என எதுவாக இருந்தாலும் அதை சல்லடையில் சலித்து பயன்படுத்துங்கள்.

சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்க சீக்கிரெட் பொருளான சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்க்கலாம்.

பின் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு வாழைப்பழத்தையு சேர்த்து பிசையலாம்.

வெறும் தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு பதில் சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசையலாம் அல்லது பால் சேர்க்கலாம்.

மாவை பிசைந்து முடித்ததும் மேற்புறத்தில் எண்ணெய் தேய்த்து ஈரத்துணி போட்டு மூடி வைத்து அரை மணி நேரம் விட்டு விடுங்கள்.

Twitter

பின்னர் சப்பாத்தி தேய்க்கும் போது மின்விசிறியின் கீழ் செய்ய வேண்டாம்.

Twitter