வீடே மணக்கும் ரசம் வைக்க... ஸ்பெஷல் ரசப்பொடி செய்வது எப்படி?
அன்றாட உணவில் ஜீரணத்திற்கு முக்கிய பங்காற்றுவது ரசம். இந்த ரசத்திலும் அசத்த ரசப்பொடி ரெசிபி இதோ...
Social Media
தேவையான பொருட்கள்: மல்லி - 1/2 கப், மிளகு - 1/4 கப், சீரகம் - 1/4 கப், கடலை பருப்பு - 1/4 கப், துவரம் பருப்பு - 1/4 கப், காய்ந்த கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள்
செய்முறை: ரசம் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் துளியும் எண்ணெய் விடாமல் மிதமான தீயில் ஒன்றின் பின் ஒன்றாக அனைந்து பொருட்களையும் பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
சூடு ஆறியதும் வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்சியில் ஒன்றாக போட்டு ஓரளவு நன்றாக அரைத்து கொள்ளவும்.
அப்படி அரைத்த பிறகு அவற்றுடன் மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக அரைக்கவும்.
Social Media
இப்போது ரசப்பொடி ரெடி, இதனை ஏர்டைட் கண்டெய்னரில் போட்டு வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Social Media