பருப்பு பொடி செய்வது எப்படி?
சாதத்தில் பிசைந்து சாப்பிட பருப்பு பொடி செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 1/2 கப், கடலை பருப்பு - 1/2 கப், பாசிப் பருப்பு - 1/2 கப், உளுந்தம் பருப்பு - 1/4 கப், பொட்டுக்கடலை - 1/2 கப், சீரகம் - அரை ஸ்பூன்,
வர மிளகாய் - 15, பூண்டு - 15, கறிவேப்பிலை, கல் உப்பு, பெருங்காயத்தூள், நெய்
செய்முறை: தீயை மிதமான சூட்டில் வைத்து 1/2 கப் துவரம் பருப்பை முதலில் நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.
இதே போல கடலை பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பொட்டுக்கடலையை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் சீரகத்தை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து 15 வத்தல் மிளகாய், கறிவேப்பிலையை வறுக்க வேண்டும்.
Social Media
இதன் பின்னர் கால் ஸ்பூன் நெய்யை சேர்த்து 15 பல் நசுக்கிய பூண்டு, கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
Social Media
வறுத்த அனைத்தையும் சூடு ஆறியதும், பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த பொடியை சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
Social Media