ஓட்ஸ் சாக்லேட் மஃபின் – ஈஸி ஸ்வீட் ஸ்நாக்!!

ஆரோக்கியமான இனிப்பு ஸ்நாக் ரெசிபியான ஓட்ஸ் சாக்லேட் மஃபின்களை எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்…

Social Media

தேவையான பொருட்கள்: ⅓ கப் ஓட்ஸ், 1/2 கப் மற்றும் 2 டீஸ்பூன் தண்ணீர், ½ தேக்கரண்டி பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் நறுக்கிய அக்ரூட் பருப்புகள், 4 டீஸ்பூன் தேங்காய் சர்க்கரை, 5 டீஸ்பூன் கொக்கோ தூள், ½ கப் பாதாம் வெண்ணெய்,

செய்முறை: செய்முறையை துவங்குவதற்கு முன் மைக்ரோவேவ் அவனை 180°C/350°Fக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்து அனைத்து பொருட்களை (பாதாம் வெண்ணெய், தேங்காய் சர்க்கரை, கொக்கோ பவுடர், பேக்கிங் சோடா, ஓட்ஸ்) ஒரு முட்கரண்டி கொண்டு கலக்கவும்.

பின்னர் தண்ணீரைச் சேர்த்து நன்கு கலந்து, 5 முதல் 10 நிமிடங்கள் விடவும். விரும்பினால், சில பிட் செர்ரிகளை அல்லது சாக்லேட் பிட்களை சேர்க்கவும்.

மஃபின் லைனர்களை கிரீஸ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். இது மஃபின்கள் செய்யப்பட்ட பிறகு அவற்றை அகற்றுவதை எளிதாக்கும்.

Social Media

மஃபின் கலவையை ஒவ்வொரு மஃபின் பான் கோப்பையிலும் கிட்டத்தட்ட லைனர்களின் மேல் ஊற்ற வேண்டும்.

Social Media

மேலே சில நறுக்கப்பட்ட நட்ஸ்கள் அல்லது சாக்லேட் துண்டுகளை சேர்க்கவும். சுமார் 15 - 20 நிமிடங்கள் வைக்கவும், பின்னர் உடனடியாக உட்கொள்ளவும்.

Social Media