சூடான சுவையான காளான் குருமா செய்வது எப்படி?

காளான் கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பலருக்கும் பிடித்தமானது. சூடான சுவையான காளான் குருமாவை ஈஸியாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various source

தேவையானவை: காளான், முந்திரி, பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல், ஏலக்காய், கிராம்பு, பச்சை மிளகாய்.

தேவையானவை: மல்லித்தழை, வெங்காயம், பட்டை, சோம்பு, சீரகம், எண்ணெய், உப்பு தேவையான அளவு.

முதலில் காளானை நீள வாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

முந்திரி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துறுவல், ஏலக்காய், கிராம்பு, பட்டை, வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக விழுதாக அரைக்க வேண்டும்.

Various source

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய காளானை அதில் போட்டு, அரைத்த கலவையை சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

காளான் வெந்து நல்ல கொதி வந்ததும் இறக்கினால் சூடான சுவையான காளான் க்ரேவி தயார்.

Various source