முட்டை இல்லாம ஆம்லெட் போடலாம் வாங்க...!!
முட்டையே இல்லாம ஆம்லெட் போடலாம்னு உங்களுக்கு தெரியுமா.. தெரியலனா தெரிஞ்சிகோங்க...
Social Media
தேவையான பொருட்கள்: கடலை மாவு- 1 கப், வெங்காயம்- 2, தக்காளி- 1, பச்சை மிளகாய்-2, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை, சிவப்பு மிளகாய்தூள்- 1/4 ஸ்பூன் கரம் மசாலா- 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பொடிசாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
இதில் கொடுக்கப்பட்ட அளவில் கடலை மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த கலவையில் ஒரு க்ளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகயின்றி கலந்து 10 நிமிடங்கள் தனியே வைத்து விடவும்.
Social Media
10 நிமிடம் ஆனதும் தோசை தவாவில் சிறிது எண்ணெய் தடவி கலவையை ஊற்றி ஆம்லெட் போல பரப்பவும்.
Social Media
இருபுறமும் முழுமையாக 5 நிமிடம் வேக விட்டு எடுத்தால் முட்டையில்லா ஆம்லெட் ரெடி.
Social Media