சுவையான சூப்பரான சுழியம் செய்வது எப்படி?

தமிழ் உணவு வகைகளில் பிரபல்யமானது சுழியம். கடலைப்பருப்பு, வெல்லம் கொண்டு சுவையான சுழியம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு, வெல்லம், துருவிய தேங்காய், சுக்குப்பொடி, ஏலக்காய் தூள், மைதா மாவு, உப்பு தேவையான அளவு

கடலைப்பருப்பை அரை மணி நேரம் நன்றாக ஊற வைத்து வேகவைத்து கொள்ள வேண்டும்.

வாணலியில் நெய் விட்டு தேங்காயை மிதமான சூட்டில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தை தனியாக வாணலியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பாகு நிலைக்கு காய்ச்சி அதில் வறுத்த தேங்காய் துறுவல், சுக்கு, ஏலக்காய் சேர்த்து பூரணம் கிளற வேண்டும்.

Various source

மைதா மாவில் தண்ணீர், உப்பு சேர்த்து ஊற்றும் பதத்திற்கு கிளறிக் கொள்ள வேண்டும்.

ஆறிய பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு பூரண உருண்டைகளை மைதா மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான சுழியம் தயார்.