ஆயுத பூஜை ஸ்பெஷல்: பச்சை பயறு பாயாசம் ரெசிபி!

ஆயுத பூஜை என்றாலே நினைவுக்கு வருவது சுண்டல், அவல் பொறிதான். ஆனால் இனிப்பு வகைகளில் பச்சை பயறு பாயாசமும் ஆயுத பூஜைக்கு பிரசித்தி பெற்றது. பச்சை பயறு பாயாசம் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சை பயறு, வெல்லம், தேங்காய் துறுவல், ஏலக்காய் பொடி, முந்திரி, நெய்,

பச்சை பயறை முதல் நாள் இரவே ஊறவைத்து குக்கரில் வைத்து 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

பயறு வெந்ததும் அதை எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக கடைந்து கொள்ள வேண்டும்.

Various Source

பின்னர் கடைந்த பயறை வேகவைத்து அதில் காய்ச்சிய வெல்லப்பாகு சேர்த்து கலக்க வேண்டும்.

Various Source

பின்னர் துறுவிய தேங்காய், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

தேவையான கெட்டிப்பதம் வந்ததும் இறக்கி பறிமாறினால் சூடான சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.