பாலில் வேகவைத்த சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?

பாலில் வேகவைத்த சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: கேரட் - 1/2 கிலோ, பால் - 1 கப், சர்க்கரை- 1/2 கப், நெய் - 4 ஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 8

செய்முறை: கேரட்டை நன்றாக கழுவி அதை நன்றாக துருவி எடுத்துகொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, திராட்சைகளை சேர்த்து வறுத்து நிறம் மாறியதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து அதில் பால் சேர்த்து, கேரட்டை நன்றாக வேக வைத்துகொள்ளவும்.

Social Media

சிறிது நேரம் கழித்து சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளர வேண்டும். தேவைப்பட்டால் நெய் சேர்க்கலாம்.

Social Media

நன்றாக இலகிய பதத்திற்கு வந்ததும், வறுத்த முந்திரி, திராட்சைகளை சேர்த்தால் கேரட் அல்வா ரெடி.

Social Media