சுவையான பிஸ்கட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

இனிப்பு வகைகளில் குலோப் ஜாமூன் பலரால் மிகவும் விரும்பப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். மேரி பிஸ்கெட்டுகளை குலோப் ஜாமூன் மாவுக்கு பதிலாக பயன்படுத்தி சூப்பரான பிஸ்கட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மேரி பிஸ்கட் – 2 பாக்கெட், 1 கப் சர்க்கரை, அரை கப் பால், ஏலக்காய் தூள், எண்ணெய்

சர்க்கரையை பாகு பதத்தில் காய்ச்சி ஏலக்காய் தூவி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் மேரி பிஸ்கட்டுகளை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிஸ்கட் மாவில் பால் சேர்த்து குலாப் ஜாமூன் உருண்டைகள் உருட்டும் பதத்தில் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

Various Source

வாணலியில் எண்ணெய் விட்டு நல்ல கொதியில் உருட்டிய உருண்டைகளை போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

பின்னர் அவற்றை தயார் செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் ஊற வைத்தால் சூப்பரான பிஸ்கட் குலாப் ஜாமூன் தயார்.